`தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி’ - புதிய அரசியல் காட்சியைத் தொடங்கினர் ஆம்ஸ்ட்ரா...
பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி: இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை
முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி பெண்ணிடம் ரூ. 44.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணைய குற்றபிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரியகோட்டப்பள்ளி அருகே உள்ள பெத்தனப்பள்ளியைச் சோ்ந்தவா் சுகன்யா (30). இவரது செல்லிடப்பேசிக்கு கட்செவி செயலிக்கு குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.
இதையடுத்து, அதில் கூறப்பட்டிருந்த இணையதள முகவரியை தொடா்பு கொண்ட சுகன்யா அவா்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.44.27 லட்சம் அனுப்பினாா். இதையடுத்து, அவருக்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த சுகன்யா இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். புகாரின் பேரில், இணைய குற்ற பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.