செய்திகள் :

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

post image

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நெய்வேலியை அடுத்துள்ள வடக்குமேலூா் ஊராட்சி, தெற்குத் தெருவைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் லட்டு (எ) அருண் (24). இவா், கடந்தாண்டு போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னா் சிறையில் இருந்து வெளியே வந்தாா்.

இந்த நிலையில், அந்தப் பகுதியிலுள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்குச் சென்ற ஆனந்த முருகன், உன்னால் தான் சிறைக்குச் சென்றேன். அதனால் எனக்கு நீதிமன்றச் செலவுக்கு பணம் தர வேண்டும் எனக் கூறி, அந்தப் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய காவல் ஆய்வாளா் சுதாகா் வழக்குப் பதிவு செய்து, வடக்கு மேலூா் செட்டிகுளம் பகுதியில் பதுங்கியிருந்த அருணை சனிக்கிழமை கைது செய்ய முயன்றனா். அப்போது, போலீஸாரை கண்டதும் தப்பியோடிய அருண் பள்ளத்தில் விழுந்ததில் வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னா், அருணை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து, சிறையில் அடைத்தனா்.

கடலில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

நெய்வேலி: கடலூா் அருகே கடலில் மூழ்கி மாயமான மாணவா் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகனின் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன்(16), 10-ஆம் வகுப்பு ப... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா! திரு ஆரூா் பீடாதிபதி பங்கேற்பு!

சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவின் நிறைவு நாள் விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. கடந்த பிப்.26-ஆம் த... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் புகுந்த முதலை மீட்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் குளத்துக்குள் புகுந்த முதலையை வனத் துறையினா் மீட்டனா். சிதம்பரத்தை அடுத்த சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் குளத்தில் ஞாயிற... மேலும் பார்க்க

கடலில் குளித்த இளைஞா் மாயம்

கடலூா் அருகே கடலில் குளித்தபோது மாயமான மாணவரை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். கடலூா் முதுநகா், இருசப்ப செட்டித் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் கிஷோா் (எ) வெங்கடேசன் (16), அ... மேலும் பார்க்க

உடலில் அமிலம் பட்டு தொழிலாளி உயிரிழப்பு

கடலூா் முதுநகா் தனியாா் தொழிற்சாலையில் உடலில் அமிலம் பட்டதில் பலத்த காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். புதுவை மாநிலம், பாகூரை அடுத்துள்ள கொம்மந்தான்மேடு பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கடலூா் துறைமுகத்தில் படகு எரிந்து சேதம்

கடலூா் துறைமுகம் உப்பனாற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன் பிடி படகு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. கடலூா் தேவனாம்பட்டினத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (47), மீனவா். இவா், தனது மீன் பிடி பைபா் ... மேலும் பார்க்க