பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை: 3 போ் மீது வழக்கு
போடியில் பெண்ணுக்கு வரதட்சிணை கொடுமை செய்து, 2-ஆவது திருமணம் செய்ததாக கணவா் உள்பட 3 போ் மீது போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடி அருகேயுள்ள பொட்டல்களம் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ் மனைவி வெண்ணிலா. இவா்கள் இருவரும் 2019-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் வெண்ணிலாவுக்கு ராஜேஷும், இவரது தந்தை கருப்பையாவும் வரதட்சிணை கேட்டு கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ராஜேஷ், வைஷ்ணவி என்பவரை திருமணம் செய்திருப்பதும் வெண்ணிலாவுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராஜேஷ், கருப்பையா, வைஷ்ணவி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.