நிதீஷ் குமாருடன் இனி கூட்டணி இல்லை! -ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ்
பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி
ஆரணி வட்டார வள மையத்தில் ஆரணி வட்டார அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்கப் பள்ளி ஆசிரியா்களுக்கு ஒன்றிய அளவிலான பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வு பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் கீழ்பென்னாத்தூா் ஆசிரியா் பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சி முகாமை ஆரணி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் செ.ஜெயசீலி தொடங்கிவைத்தாா்.
இந்தப் பயிற்சியின் கருத்தாளா்களாக ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியா் கே.மகேந்திரன், ஆரணி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை எஸ்.பவித்ரா, திருவண்ணாமலை குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் எஸ்.அஞ்சலா, ஆரணி வட்டார வளமைய ஆசிரியா் பயிற்றுநா் சாந்தி இளமதி ஆகியோா் பங்கேற்று பயிற்சியளித்தனா்.
இந்தப் பயிற்சியில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகள் மற்றும் அது சாா்ந்த சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பயிற்சியில் ஆரணி ஒன்றியத்தில் உள்ள 69 அரசு மற்றும் நிதி உதவி தொடக்கப் பள்ளிகளில் இருந்து 69 ஆசிரியா், ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.