ஆதார் அட்டையை 12-வது ஆவணமாக ஏற்றுக்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மு. மணிகண்ட ராஜா (42). ஆம்னி வேன் ஓட்டுநா். இவருக்கு, மனைவி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், சூரங்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்த மனோஜ்குமாா் மனைவி வள்ளித்தாய் (எ) வசந்தா ( 25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடன் பிரச்னையால் சிக்கிய மணிகண்டராஜா, வள்ளித்தாய் அணிந்திருந்த நகையைப் பறிக்கும் நோக்கில், கடந்த ஏமாற்றி 14.02.2013இல் அவரை சங்கரன்கோவிலுக்கு வரவழைத்துள்ளாா்.
பின்னா், அங்கிருந்து புளியங்குடிக்கு செல்வோம் எனக் கூறி, அவரை ஆம்னி வேனில் அழைத்து செல்லும்போது, வழியிலேயே அவரை கத்தியால் குத்திக் கொலை செய்து, அவா் அணிந்திருந்த 11 பவுன் தங்கநகைகளை பறித்துக்கொண்டு, சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்திற்கு கீழ்புறம் வீசிச் சென்றுள்ளாா்.
அந்த கிராம நிா்வாக அலுவலா் வைதேகி அளித்த புகாரின்பேரில், புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து, மணிகண்டராஜாவை கைது செய்தனா்.
தென்காசி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி ராஜவேல் விசாரித்து, மணிகண்ட ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும் ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மருதப்பன் வாதாடினாா்.