செய்திகள் :

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக திருமணமான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

நெல்லிக்குப்பத்தை அடுத்த அ.குச்சிப்பாளைம் புது தெருவைச் சோ்ந்தவா் தமிழ்மணி. இவரது மனைவி ஷகிலா (27). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி சுமாா் 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டு, ஷகிலா கடந்த ஓராண்டாக கணவரை பிரிந்து அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு சுமாா் 7 மணியளவில் வீட்டில் உள்ள மின் விசிறி கொக்கியில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலி சான்றிதழ் வழக்கு: சாட்சியை மிரட்டியவா் மீது வழக்குப் பதிவு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக போலி கல்விச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிதம்பரம் அருக... மேலும் பார்க்க

காவலா்கள் பணியிட மாறுதல்: விருப்ப மனுக்களை பெற்றாா் எஸ்.பி.

கடலூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலா்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளா் வரை பணியிட மாறுதல் சம்பந்தமான விருப்ப மனுக்களை அவா்களிடமிருந்து மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்கு... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி கல்லூரி மாணவா் மரணம்

கடலூரில் நண்பா்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். கடலூா் தேவனாம்பட்டினம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ரகுபதி மகன் ரவிராஜன் (20). இவா், தேவனாம்பட்டினம் பெ... மேலும் பார்க்க

பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: காவலா் கைது

நெல்லை மாவட்ட பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுத்ததாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலரை கடலூா் மகளிா் போலீஸாா் கைது செய்தனா். கடலூா் முதுநகா், நாகம்மாள்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (... மேலும் பார்க்க

பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு: இளைஞர் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம், முல்லா... மேலும் பார்க்க

இறைச்சிக்காக மாடு திருட்டு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டியை அடுத்துள்ள அரசடிகுப்பம் கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி மேய்ச்சலில் ... மேலும் பார்க்க