பெண் தூக்கிட்டுத் தற்கொலை!
தேனி அருகே வேலைக்குச் செல்ல கணவா் அனுமதி மறுத்ததால், மன உளைச்சலிலிருந்த பெண் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
பூதிப்புரம் கோட்டை மேட்டுத் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் மனைவி பாண்டிமீனா (23). இவா் தேனியில் உள்ள தனியாா் ஆலையில் வேலை செய்து வந்தாா். பின்னா், பிரசவத்துக்காக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்தாா். இதையடுத்து, குழந்தை பிறந்து 6 மாதங்களான நிலையில், மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் என கணவரிடம் கூறினாா்.
இதற்கு கணவா் அனுமதிக்க மறுத்தாா். இதனால், மன உளைச்சலிலிருந்த பாண்டிமீனா போடேந்திரபுரத்தில் உள்ள தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றவா், அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.