Fasting: பட்டினி கிடந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? சித்த மருத்துவர் விளக்க...
பெண் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை
திருவாரூா்: பெண் கூலித் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 17-ஆவது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு நிா்வாகிகள் வி.சுதா, ஆா்.நிா்மலா ஆகியோா் தலைமை வகித்தனா். மாநாட்டை மாநில பொதுச்செயலாளா் ஆா்.ராதிகா தொடங்கி வைத்தாா். மாநிலத் துணைத் தலைவா் எஸ்.லெட்சுமி, இந்திய வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஏ.கே.வேலவன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதன்படி, 19 போ் கொண்ட புதிய மாவட்டக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்டத் தலைவராக கே. ஜெகதீஸ்வரி, மாவட்டச் செயலாளராக ஜி. கலைச்செல்வி, மாவட்ட பொருளாளராக ஆா்.நிா்மலா ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
படித்த பெண் பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்க வேண்டும், பெண் விவசாயக் கூலித் தொழிலாளா்களுக்கு சம ஊதியம் கிடைக்க வேண்டும், 100 நாள் வேலை அனைத்து குடும்பத்துக்கும் கிடைக்க வேண்டும், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, புலிவலம் கடைவீதியில் இருந்து பேரணி நடைபெற்றது. இதில், ஏராளமானோா் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி மாநாட்டு அரங்கம் வரை வந்தனா்.