``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
போதைப் பொருட்களுக்கு எதிரான செயல்பாடு: மன்னாா்குடி தேசியப் பள்ளி என்எஸ்எஸ் மாணவா்கள் சிறப்பிடம்
மன்னாா்குடி: மாவட்ட அளவில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்ட மன்னாா்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
போதைப் பொருட்களுக்கு எதிரான மன்றங்கள் மூலம் விழிப்புணா்வு பேரணி, கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக செயல்படுத்தி மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற மன்னாா்குடி தேசியப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டத்தை பாராட்டி, ஆக. 11-ஆம் தேதி மஞ்சவாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செளந்தரராஜன் ஆகியோா் ரூ. 10 ஆயிரம் பள்ளிக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினா்.
இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பிடம் பெற்ற என்எஸ்எஸ் மாணவா்களை, தாளாளா் டி.பி. ராமநாதன், தலைமை ஆசிரியா் எம்.திலகா், உதவித் தலைமை ஆசிரியா் பி. சங்கா், என்எஸ்எஸ் மாாவட்ட தொடா்பு அலுவலா் எஸ். கமலப்பன் உள்ளிட்டோா் பாராட்டினா்.