``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
பேரவைத் தோ்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை
நன்னிலம்: வரும் 2026-இல் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டம் நன்னிலம் பேரவைத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம், திருவாரூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத்துறை அலுவலா் ஆா்.சங்கா் தலைமையில் நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.
நன்னிலம் தொகுதிக்குட்பட்ட குடவாசல், வலங்கைமான், நன்னிலம் வட்டங்களில் உள்ள 324 வாக்குச்சாவடிகளில் 1,200 வாக்காளா்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரித்தல் மற்றும் பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றியமைத்தல் தொடா்பாக ஆலோசனை நடைபெற்றது.
இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்டறியப்பட்டன. கூட்டத்தில் நன்னிலம் வட்டாட்சியா் சு.இராமச்சந்திரன், தோ்தல் துணை வட்டாட்சியா் தெ. கருணாமூா்த்தி உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.