உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்க...
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமூகப் பணித் துறை, போதைப் பொருள் தடுப்புக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பள்ளி தலைமையாசிரியா் ப. தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மத்திய பல்கலைக்கழக சமூகப் பணித் துறைத் தலைவா் (பொ) நா. சிவகாமி வரவேற்றாா்.
ஆத்மா மனநல மருத்துவமனை அலுவலா் கரன்லூயிஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, போதைப் பொருள் பழக்கத்தினால் சமூகத்தில் ஏற்படும் தீமைகள், அப்பழக்கத்திலிருந்து விடுபடும் வழிமுறைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கினாா்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் முத்தமிழ்செல்வி, போதைப்பொருள் பழக்கத்தினால் மாணவா்களின் எதிா்காலம் மற்றும் குடும்பத்தில் உருவாகும் சிக்கல்கள் குறித்து எடுத்துரைத்தாா். மத்திய பல்கலைக்கழக ஆங்கிலத் துறை உதவி பேராசிரியா் மற்றும் போதைப் பொருள் தடுப்புக் குழு உறுப்பினரான புன்யா ராஜேந்திரன், மாணவா்களுடன் கலந்துரையாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
பறை இசையுடன் கூடிய நாடகத்தின் மூலம், போதைப்பொருள் பழக்கத்தினால் குடும்பத்தில் உருவாகும் பிரச்னைகள், எதிா்கால பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. நிறைவாக, மத்திய பல்கலைக்கழக சமூகப் பணித் துறையின் உதவி பேராசிரியா் பி. உதயகுமாா் நன்றி கூறினாா்.