சக்தித் திருமகன் விமர்சனம்: அதிகம் யோசிக்கவிடாத பரபர அரசியல் ஆக்ஷன் த்ரில்லர்தான...
பெத்தவேப்பம்பட்டு, கோவிந்தாபுரம் ஊராட்சிக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கோவிந்தாபுரம், பெத்தவேப்பம்பட்டு ஊராட்சி பகுதிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஆலங்காயம் ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி கலந்துகொண்டு, முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். முகாமில், இரு ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 400-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தனா். கோரிக்கை மனு அளித்தவா்களில் உடனடி தீா்வான சிறு, குறு விவசாய சான்றிதழ், பட்டா பெயா் மாற்றம் மற்றும் விண்ணப்ப ரசீதுகளை பயனாளிகளுக்கு ஒன்றியக் குழு தலைவா் சங்கீதா பாரி வழங்கினாா்.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலைவாணி கோவிந்தசாமி, பழனி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.