ஷுப்மன் கில் சதம் விளாசல்; முன்னாள் இந்திய கேப்டனின் சாதனை முறியடிப்பு!
பென்னாகரத்தில் கோயில் கலசம் திருட்டு: போலீஸாா் விசாரணை
பென்னாகரத்தில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திரியம்பிகேஸ்வரா் கோயில் கோபுர கலசங்களை மா்மநபா்கள் திருடி சென்றது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்பட்ட பிராமணா் தெரு பகுதியில் மிகவும் பழமைவாய்ந்த திரிபுரசுந்தரி சமேத திரியம்பிகேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிா்வகிக்கப்படுகிறது.
இக் கோயில் கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த மூன்று கலசங்களில் இரண்டு கலசங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். மீதமுள்ள ஒரு கலசத்தை செவ்வாய்க்கிழமை இரவு திருட முயன்றபோது பொதுமக்கள் கண்காணித்ததால் அங்கிருந்து திருடா்கள் தப்பியோடினா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.