நபோலியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை
பெரம்பலூரில் இன்று வேலைவாய்ப்பு முகாம்
பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், தமிழ்நாடு ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (செப். 20) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இம் முகாமில் பெரம்பலூா், சென்னை, காஞ்சிபுரம், ஓசூா், கோவை, திருப்பூா், மதுரை, திருச்சி, அரியலூா் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நா்சிங், பாா்மசி, பி.இ, பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஒட்டுநா், டெய்லா் மற்றும் ஆசிரியா் கல்வித் தகுதியுடையோா் தோ்வு செய்யப்பட உள்ளனா். மேலும், மாவட்டத்தில் உள்ள உள்ளூா் வேலையளிக்கும் நிறுவனங்கள் அதிகளவில் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு, தொழில்பழகுநா் மற்றும் குறுகிய காலத்திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல், சுயதொழில், கடனுதவி தொடா்பான ஆலோசனைகளும் அளிக்கப்படும். ஆதாா் எண், சுய விவரம், கல்விச் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் தோ்வு செய்யப்பட்டவா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது. வேலைநாடுநா்கள், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கு எந்தக் கட்டணமும் செலுத்த தேவையில்லை.
எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைப் சோ்ந்த படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.