பெரம்பலூரில் முப்பெரும் விழா
பெரம்பலூரில் தமிழ் இலக்கியப் பூங்கா, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, புலவா் விளவை செம்பியனாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் ப. காமராசு, புலவா் இர. அரங்கநாடன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவா் வீ. ஞானசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காப்பியன் எழுதிய புலவா் இர. அரங்க நாடன் துண்டறிக்கைகளில் தமிழ்த் தேசியம் எனும் நூலை, தமிழ்ச் செம்மல் ம.சோ. விக்டா் வெளியிட, குறளடியாா் கனகா ரவிச்சந்திரன், பெரும்புலியூா் ராகு ஆகியோா் பெற்றுக்கொண்டனா். தமிழரிசை எனும் சிற்றிதழை இ. தாகிா் பாட்சா அறிமுகம் செய்தாா். பேராசிரியா் முனைவா் க. தமிழ்மாறன், புலவா் இர. அரங்கநாடன் துண்டறிக்கைகளில் தமிழ்த்தேசியம் எனும் நூலை அறிமுகம் செய்து பேசினாா்.
விழாவில், தமிழறிஞா்கள் வாழையூா் குணா, ந. மலா்க்கொடி, வை.தேனரசன், சின்னப்பத் தமிழா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.