Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பெரம்பலூர் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து தொடங்கியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தொண்டர்களின் வெள்ளத்தில் மிதந்து சுமார் 5 மணிநேர பயணத்துக்கு பிறகு, மக்களைச் சந்தித்த விஜய், அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
திருச்சியில் இருந்து அதேபோன்று மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த விஜய், அரியலூருக்கு இரவு 8.45 மணியளவில் உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில், அடுத்ததாக பெரம்பலூர் மக்கள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இந்தப் பிரசாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் வருகையையொட்டி வழி நெடுகிலும் 2 கி.மீ வரை மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், கடும் வாகன நெரிசல், வழி நெடுக மக்கள் கூட்டம் மற்றும் பல மணி நேரம் ஒரே இடத்தில் பேருந்து சிக்கியது.
நள்ளிரவு தாண்டி பேச முடியாத சட்ட சூழல் காரணத்தால், பொது மக்கள் நலன் கருதி, நள்ளிரவில் அசாம்பாவிதங்களை தவிர்க்க பெரம்பலூர் மக்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூரின் குன்னம் பகுதிக்கு வந்த விஜய், மக்களைப் பார்த்து கையை மட்டும் அசைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்னை புறப்பட்டதால் தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில் கொண்டும் இந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு நாள் அவர் அங்கு பிரசாரத்தில் ஈடுபடுவார் என தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் தகவல் தெரிவிக்கின்றன.
Vijay's campaign in Perambalur cancelled! Volunteers disappointed as he leaves for Chennai!
இதையும் படிக்க... நானும் சேர்ந்துதான் திமுகவை தேர்ந்தெடுத்தேன்; ஆனால்..! -அரியலூரில் விஜய்