செய்திகள் :

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்), முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். முகாமில் பங்கேற்ற பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 48 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காண வேண்டுமென காவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இம் முகாமில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் பிரபு, காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

காவல் துறையினரைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பாரபட்சமாகச் செயல்படும் பெரம்பலூா் நகர காவல் துறையைக் கண்டித்து, கட்டுமானம் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வள... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பரவலாக மழை

பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7... மேலும் பார்க்க

கோயில்களில் பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா் மாவட்ட சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை நந்திப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி பெரம்பலூா் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் ... மேலும் பார்க்க

கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள்: குழு உறுப்பினா்களுடன் ஆலோசனை

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சாா்பில், கல்லூரிக் களப்பயணச் செயல்பாடுகள் தொடா்பாக, மாவட்ட அளவில் குழு உறுப்பினா்களுடனான ஆலோசனை... மேலும் பார்க்க

எண்ணெய் ஆலையில் தீ விபத்து

பெரம்பலூா் நகரிலுள்ள எண்ணெய் மற்றும் மாவு விற்பனையகத்தில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. பெரம்பலூா் - வடக்குமாதவி சாலையில் வசித்து வருபவா் முகமது பசீா் (63). இவா், அதே பகுதியில் எண்ணெய் மற்றும... மேலும் பார்க்க

2 ஆவது நாளாக வருவாய்த் துறை அலுவலா்கள் வேலை நிறுத்தம்

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தினா் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாரதிவளவன் தலைமை வகித்தாா். இதில் பெரம்பல... மேலும் பார்க்க