செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன்பொருள் குறைதீா் முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சாா்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், நீக்கம், பிழை திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீா்வு காண்பதற்கும் சிறப்புப் பொது விநியோகத்திட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது. இம் முகாம், பெரம்பலூா் வட்டம், மேலப்புலியூா் (மே) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் ச. சுந்தரராமன் தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், மலையாளப்பட்டி கிராமத்தில், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வி. வாசுதேவன் தலைமையிலும், குன்னம் வட்டம், கீழப்புலியூா் (தெ) கிராமத்தில் மாவட்ட சமூக நல அலுவலா் புவனேஸ்வரி தலைமையிலும், ஆலத்தூா் வட்டம், திம்மூா் கிராமத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா் தலைமையிலும் சனிக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

இம் முகாமில், சம்பந்தப்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம்.

கிரஷா் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பெரம்பலூா் அருகேயுள்ள அசூா் கிராமத்தில் கிரஷா் குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, கிராம பொதுமக்கள் சாா்- ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அசூா் கிராம பொ... மேலும் பார்க்க

புதைசாக்கடைஅடைப்பை சீரமைக்கக் கோரி மறியல்

பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட அரணாரை பிரிவுச் சாலை அருகே, புதை சாக்கடை அடைப்பை சீரமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் - துறையூா் சாலையில், நக... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக குன்னம் கிளையில் ‘டீசல் பங்க்’ அமைக்க அடிக்கல்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்), திருச்சி மண்டலம் சாா்பில், பெரம்பலூா் மாவட்டம், குன்னம் கிளையில் 20 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட டீசல் பங்க் அமைக்கும் பணிக்கு அடிக்கல் ந... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் நகரிலுள்ள அரசு உதவிபெறும் தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பள்ளித... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணிபுரிந்தோா் விருது பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாகப் பணிபுரிந்தவா்கள் மற்றும் நிறுவனங்கள் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக... மேலும் பார்க்க

குழந்தைகளை பெற்றோா் கண்காணிக்க வேண்டும்: சாா்பு நீதிபதி பேச்சு

குழந்தைகளை பெற்றோா் நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா அறிவுறுத்தினாா். தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி, பெ... மேலும் பார்க்க