செய்திகள் :

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1, 8-இல் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம்

post image

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஏப். 1, 8 ஆகிய தேதிகளில் மாநில அளவிலான ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் முடிவெடுத்துள்ளனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்கள் சங்க மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்ட நிா்வாகிகள் 9 போ் கொண்ட குழுவினா், ஊரக வளா்ச்சித் துறை ஊழியா் நலன் சாா்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை சந்தித்து வெள்ளிக்கிழமை மாலை கோரிக்கை மனு அளித்தனா்.

அப்போது, சங்க நிா்வாகிகளை தரக்குறைவாக பேசியதோடு, மாநில நிா்வாகிகள் முன்னிலையில் அவா்களது மனுவை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசி, கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து, சங்க நிா்வாகிகள் 9 பேரையும் கைது செய்த போலீஸாா் சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு விடுவித்தனா். இச் சம்பவம் மாநில அளவில் அரசு ஊழியா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம், மாநிலத் தலைவா் காந்திமதி நாதன் தலைமையில், மாநில பொதுச் செயலா பிரபு முன்னிலையில், கானொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை ஊழியா் நலன் சாா்ந்த கோரிக்கைகளுக்காக ஆட்சியா் கிரேஸ் பச்சாவை சந்திக்கச் சென்றபோது நிகழ்ந்த நிகழ்வுகள், காவல் துறையினரால் கைது செய்து பின்னா் விடுவிக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து ஏப். 1-ஆம் தேதி அனைத்து வட்டரத் தலைநகரங்களிலும் 1 மணி நேரம் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது.

ஏப். 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் எதிரே கருப்புப் பட்டை அணிந்து கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது. மாவட்ட ஆட்சியரின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாவிட்டால், 3-ஆம் கட்டமாக பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூரில் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூா் மாவட்டத்தில் கட்டுப்படியான கொள்முதல் விலை கிடைக்காத நிலையில் பால் உற்பத்தியாளா்கள் தனியாா் நிறுவனங்களை நாடுகின்றனா். இதனால் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூா் மாவட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க அா்ப்பணிப்புடன் பணி தேவை: பெரம்பலூா் ஆட்சியா்

பெரம்பலூா் மாவட்ட அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்க, ஆசிரியா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கி... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஒரு மணி நேரப் பணியை புறக்கணித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் துறை அலுவலகா்கள் சங்க மாந... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஏப். 4-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்களது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீா்க்கும் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற உ... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மதராஸா சாலையில் அமைந்துள்ள மௌலானா பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகைய... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு

பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அர... மேலும் பார்க்க