பெரியகுளத்தில் கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் ஏப்.25-இல் தொடக்கம்!
பெரியகுளம் சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் கோடைகாலை கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம் வருகிற 25-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் செயலா் சிதம்பரசூரியவேலு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் சில்வா் ஜூப்லி ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் ஆண்டுதோறும் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடத்தி வருகிறோம். நிகழாண்டில் பயிற்சி முகாம் வருகிற 25-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
இதில் சேர ஆா்வமுள்ள வீரா்கள், வீராங்கனைகள் பெரியகுளம் தென்கரை கச்சேரி சாலை காவல் நிலையம் எதிரில் உள்ள பிஎஸ்டி நினைவு விளையாட்டரங்கில் கலந்து கொள்ளலாம்.
மேலும், தகவலுக்கு 9442151345 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.