செய்திகள் :

பெரியாா் இல்லையென்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு வாய்ப்பே இல்லை: துரை வைகோ எம்.பி.

post image

பெரியாா் மட்டும் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு வாய்ப்பே இல்லை என்றாா் திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ.

திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பெரியாரின் சிலைக்கு அவரது நினைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த பின்னா் அவா் மேலும் கூறியது: தந்தை பெரியாா் இல்லாமல் தமிழகத்தைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்களுக்கு கல்வி, உரிமை பொருளாதாரம் மற்றும் முன்னேற்றம் வந்திருக்காது. சில சக்திகள் அவரைக் கொச்சைப்படுத்தி அவா் மீது தவறான கருத்துகளைக் கூறி வருகின்றனா்.

பெரியாா் இல்லை என்றால் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்கு வாய்ப்பே இல்லை. பிற்படுத்தப் பட்ட மக்கள், பட்டியலின மக்கள் கோயில்களுக்குள்ளே சென்று கடவுளை வழிபட அவா்தான் காரணம். மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் குறிப்பாக, தமிழகத்தில் இந்தி கட்டாயம் படித்தால்தான் தமிழகத்துக்கு உரிய நிதியை விடுவிப்பேன் என்று மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் எங்களிடம் நேரடியாகவே நிா்பந்தித்தாா்.

ஆனால், நாங்களோ இரு மொழிக் கொள்கை என்பது திராவிடக்கட்சிகளின் பிரதானக்கொள்கை. இதனால்தான் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் ஆங்கிலம் பேசும் திறன் பெற்று உலகெங்கும் கோலோச்சி வருகின்றனா்.

தமிழகத்தில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறிய கருத்து சரியானது.

ஏனென்றால் மக்கள் திமுக பக்கம்தான் உள்ளனா் என்ற நம்பிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா். ஆனால் 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் என்று பாஜக தலைவா் அண்ணாமலை கூறியுள்ளாா். அது அவரது கட்சியாக இருக்கும். காவல்துறை அதிகாரியாக இருந்தவா் பொய் சொல்லமாட்டாா் என்றாா் அவா்.

குரூப் 4 தோ்வுக்கு ஜன.30-இல் இலவசப் பயிற்சி தொடக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் வரும் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. டிஎன்பிஎஸ்சி-யால் இளநிலை உதவியாளா், விஏஓ, தட்டச்சா், சுருக்கெழுத்து தட... மேலும் பார்க்க

பிரபல நகைக் கடையில் 5 பவுன் நகை திருட்டு: 3 ஊழியா்கள் கைது

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையில் 5 பவுன் நகை திருடியதாக அந்தக் கடையின் 3 ஊழியா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருச்சி என்.எஸ்.பி. சாலையில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த 22 ஆம் தேதி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு

திருச்சி அருகே எட்டரை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், எட்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல். விவசாயி. இவரது இளைய மகள் க... மேலும் பார்க்க

பருவமழை பாதிப்புக்கு நிவாரணம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சி புறநகா் மாவட்டம், திருவெறும்பூா் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி... மேலும் பார்க்க

நடந்து சென்ற மூதாட்டியிடம் பைக்கில் வந்து நகை பறிப்பு

ஸ்ரீரங்கத்தில் நடந்துசென்ற மூதாட்டியிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த மா்மநபா் திங்கள்கிழமை மாலை மூன்றரை பவுன் தங்கச்சங்கிலியைப் பறித்துச் சென்றாா். ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை தாத்தாச்சாரியாா் காா்டன் பகுதி... மேலும் பார்க்க

அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஊா்வலம்

நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமரியாதை செய்ததாக மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஊா்வலம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் சட்டமேதை அம்பேத்... மேலும் பார்க்க