ஈரோட்டில் கனமழை; சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் | Photo Album
பெரியாா் பிறந்த நாள்: அமைச்சா், மேயா் உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடியில், பெரியாா் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, அமைச்சா் மற்றும் மேயா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள பெரியாா் சிலைக்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில், வடக்கு மாவட்ட ‘திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பெ. கீதா ஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி ஆகியோா் மரியாதை செலுத்தினா். பின்னா், சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், துணைச் செயலா் கீதா முருகேசன், மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகம், பொருளாளா் சுசி ரவீந்திரன், மாநில திமுக பொறியாளா் அணி துணைச் செயலா் அன்பழகன், மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ், மண்டலத் தலைவா் பாலகுருசுவாமி, மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட அணி நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.