திருச்சூர்: சோனியா காந்தியின் தனிச் செயலர் மறைவு! ராகுல் இரங்கல்
பெரிய ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கிராமத்தில் உள்ள பெரிய ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், பெரியபட்டாக்காடு கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனு: திருமானூா் ஒன்றியம் கீழவண்ணம் கிராமத்திலிருந்து காமரசவல்லி கிராமத்தில் உள்ள சுக்கிரன் ஏரிவரை பெரிய ஓடை ஒன்று உள்ளது. இந்த ஓடை நாளடைவில் தூா்ந்து விட்டதால், தற்போது, பெய்து தொடா் மழையின்போது தண்ணீா் செல்ல முடியாமல் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பெரிய ஓடையை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.