கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்
பெருங்களூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் ரூ. 62.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
அப்போது இங்கு நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியா் மு. அருணா குத்துவிளக்கேற்றினாா். 4,850 சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கொள்முதல் நிலையம் 350 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்டதாகும்.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா, நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் எம். சீதாராமன், துணை மேலாளா் (தரக் கட்டுப்பாடு) பன்னீா்செல்வம், உதவி மேலாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
புதிய கிடங்குக்கு அடிக்கல்...இதேவிழாவில், பொன்னமராவதி கொன்னையூரில் ரூ. 1.70 கோடியில் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கூடுதல் வட்ட செயல்முறைக் கிடங்கு கட்டுவதற்கான அடிக்கல்லையும் முதல்வா் ஸ்டாலின் நாட்டி வைத்தாா்.