"ராஜேந்திர சோழன்... இளையராஜா... பாரதம்" - ஆடி திருவாதிரையில் மோடியின் முழு உரை
பெருமணலில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு: மு.அப்பாவு தகவல்
திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் கிராமத்தில் ரூ.20 கோடியில் தூண்டில் வளைவு, இடிந்தகரை, கூத்தங்குழி பகுதிகளில் ரூ.4 கோடியில் மீன்வலைக்கூடம், மீன் ஏலக்கூடம் ஆகியவை அமைக்கப்படவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்துள்ளாா்.
திருநெல்வேலி மாவட்ட மீனவக் கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்கும் வகையில், பெருமணல் கிராமத்தில் தூண்டில் வளைவும், இடிந்தகரையில் மீன்வலைக்கூடமும், கூத்தங்குழி கிராமத்தில் மீன்வலைக்கூடம்- மீன்ஏலகூடமும் அமைக்கப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இதையேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின், மேற்கூறிய பணிகளுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளாா். இந்த திட்டங்கள் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இதன் கட்டுமான பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என பேரவைத் தலைவா் தெரிவித்துள்ளாா்.