கரூர் நெரிசல் பலி: பாதிக்கப்பட்டவர்களுடன் இன்று விஜய் சந்திப்பு?
பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி சிறப்பு வழிபாடு
புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமையொட்டி அரியலூா் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் வளமான வாழ்வு கிட்டும் என்பது ஐதிகம். நிகழாண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றன.
இதில் அரியலூா் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 2-ஆவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை சுப்ரபாத சேவை, விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றுக்குப் பின், பெருமாள், தாயாா் ஸ்ரீதேவி, பூதேவி உத்ஸவா்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி அா்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபசார பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல் அரியலூா் கோதண்டராம கோயில், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள குருவலப்பா் கோயில், கீழமாளிகை பெருமாள் கோயில் மற்றும் ஜெயங்காண்டம், திருமானூா், திருமழபாடி, தா. பழூா், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா்.