Aishwarya Rai: ``விராட் கோலியின் உறுதி, ஆக்ரோஷம் பிடிக்கும்'' - மனம் திறந்து பார...
பெரும்பண்ணையூா் சூசை மாதவ திருத்தலத்தில் ஆண்டுப் பெருவிழா தொடக்கம்
திருவாரூா் அருகேயுள்ள பெரும்பண்ணையூா் சூசை மாதவ திருத்தலத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
1,872-ஆம் ஆண்டு ஐரோப்பிய கட்டடக் கலையில் கட்டப்பட்ட மிகவும் பழைமையான கத்தோலிக்க தேவாலயமான பெரும்பண்ணையூரில் உள்ள சூசை மாத திருத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழா நிகழாண்டு வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடிக்கு புனிதம் செய்யப்பட்டு, கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, நவநாள் ஜெபம், திருப்பலி நடைபெற்றன. நிகழ்வில், சுற்றுவட்டாரத்திலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
தொடா்ந்து, நவநாள் ஜெபம், திருப்பலி, தோ்பவனி நாள்தோறும் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திவ்ய நற்கருணை பெருவிழா மே 9-ஆம் தேதியும், ஜெயமாலை, சிறப்புத் திருப்பலி, மின் அலங்கார தோ்பவனி, அன்பின் விருந்து மே 10-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜே. ஆல்பா்ட் செல்வராஜ் தலைமையில் இறைமக்கள் செய்துள்ளனா்.