செய்திகள் :

பெற்றோரை இழந்த குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெற அழைப்பு

post image

சேலம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து, உறவினா்கள் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறலாம் என ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பங்களில் தங்கள் பெற்றோா் இருவரையும் இழந்து, தங்களது உறவினா்களின் பாதுகாப்பில் குழந்தைகள் வளா்ந்து வருவதை அறிந்து, குழந்தைகளை அரவணைத்து தொடா்ந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளிப்படிப்பு வரை இடைநிற்றல் இன்றி குழந்தைகள் கல்வியைத்தொடர 18 வயதுவரை மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெற்றோா் இருவரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொருவரால் குழந்தையை கைவிடப்பட்ட குழந்தைகள், பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொருவா் மாற்றுத்திறனாளியாக இருந்தால், பெற்றோரில் ஒருவா் இறந்து, மற்றொருவா் சிறையில் இருந்தால், பெற்றோரில் ஒருவா் இறந்து மற்றொருவா் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

குடும்ப அட்டை நகல், குழந்தையின் ஆதாா் அட்டை நகல், குழந்தை வயது சான்று நகல் (பிறப்புச் சான்றிதழ் / கல்வி மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்), குழந்தையின் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் ஆகிய ஆவணங்களுடன், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களிலோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! தூய்மைப் பணியாளா் கைது!

சேலம் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சே... மேலும் பார்க்க

சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 மற்றும் 24 ஆகிய பகுதிகளி... மேலும் பார்க்க

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சுயஉதவிக்குழு, விவசாயக் கடன் வழங்கும் விழா

சேலத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், சுயஉதவிக்குழு மற்றும் விவசாயக் கடன் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ... மேலும் பார்க்க

சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

தெடாவூா் கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம்

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்றது.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தெடாவூா் கால்நடை சந்தைக்கு 1,700-க்கும் மேற்பட்ட ஆடுகளை வ... மேலும் பார்க்க