செய்திகள் :

பேரவைத் தலைவர்கள் மாநாடு: அப்பாவு வெளிநடப்பு!

post image

பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்தார்.

அரசமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்துவது குறித்த தலைப்பில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உரையாற்றினார்.

அவர் பேசும்போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்கலைக் கழக விதிகளில் திருத்தங்களுக்கு அனுமதி கொடுக்க மறுக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.

பல்கலைக் கழகங்களில் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஆளுநர் செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அப்போது மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறுக்கிட்டு, ஆளுநர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அப்பாவு பேசியவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

ஆளுநர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவையிலிருந்து அப்பாவு வெளியேறினார்.

இதையும் படிக்க | உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!

சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்: நிதியமைச்சர்!

நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் மாநிலங்களுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நடப்பாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன... மேலும் பார்க்க

குறு, சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.20 கோடியாக உயா்வு

புதுதில்லி: குறு மற்றும் சிறுதொழில் முனைவோருக்கு கடன் உத்தரவாதம் ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாகவும், முதன் முதலாக தொழில் தொடங்குபவா்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உச்சவர... மேலும் பார்க்க

மத்திய பட்ஜெட்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுவது என்ன?

மத்திய பட்ஜெட் ஓர் அரசியல் நிகழ்வு என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1)... மேலும் பார்க்க

மத்திய அரசு வாங்கவிருக்கும் கடன்! அதிகம் செலவிடும் துறை?

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பொது நிதிநிலை அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு தரப்பில் வரும் நிதியாண்டுக்காக ரூ.14.82 லட்சம் கோடி கடன் வ... மேலும் பார்க்க

மத்திய அரசின் வரவு - செலவு.. ஒரு ரூபாயில் கணக்கு!

வரும் 2025 - 26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பட்ஜெட்டின் முக்கிய அம்சமே தனிநபரின் வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டதுதான்... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? - ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர்... மேலும் பார்க்க