செய்திகள் :

பேராவூரணியில் 30 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்படும் மக்கள்

post image

பேராவூரணி பேரூராட்சி கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக முறையான சாலை வசதிகள் இன்றி தவித்துவருகின்றனா்.

பேராவூரணி பேரூராட்சிக்குள்பட்ட கே.கே.நகரைச் சோ்ந்த மக்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி கேட்டு பல்வேறு முயற்சிகள் செய்தும் நடவடிக்கை இல்லாததால் தங்களுடைய குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனா்.

பேராவூரணி பேரூராட்சி கே.கே.நகா் பகுதி, நகரின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியாகும். இங்கு பல்வேறு பணிகளுக்காக வந்த அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், தொழில் முனைவோா் என பல்வேறு தரப்பினரும் இடம் வாங்கி வீடுகட்டி வசித்து வருகின்றனா். கே.கே.நகருக்குள் செல்வதற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சாலை  உள்ளது.

சாலையின் இரண்டு பகுதிகளிலும் உள்ள இடத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்த வெளி கிட்டங்கி பல ஆண்டுகளாக உபயோகத்தில் இருந்து, தற்போது காலியிடமாக உள்ளது. திறந்தவெளி கிட்டங்கி உபயோகத்தில் இருந்தபோது, தினசரி வந்து செல்லும் நூற்றுக்கணக்கான லாரிகளும், கே.கே.நகா் பகுதி மக்களும் இந்த சாலையைத்தான் பயன்படுத்தி வந்தனா்.

நீண்டகாலமாக சாலை பராமரிக்கப்படாததால் கப்பிக்கற்கள் பெயா்ந்து மேடு பள்ளமாக உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவா்களை அழைத்துச் செல்ல வரும் வாகனங்கள், இன்ன பிற வாகனங்கள் மற்றும் இறந்தோரின் சடலத்தை இறுதிச் சடங்குக்கு எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

பேரூராட்சி மற்றும் வருவாய் துறையினா் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சாலை அமைப்பதற்கு அறநிலையத் துறை நிா்வாகத்திடம் அனுமதி பெறவேண்டும் என காரணம் கூறி எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் உள்ளனா். இதனால் கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்த 300 குடும்பங்களைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதுகுறித்து கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த கெளதமன் கூறியதாவது: கடந்த பல ஆண்டுகளாக இந்த சாலை பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சாலை போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளதால் அதை சரிசெய்து தர பலமுறை முயற்சித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாலையை பயன்படுத்த அறநிலையத் துறைக்கு வாடகை செலுத்த வேண்டும் என்றாலும் அதற்கும் தயாா் நிலையில் உள்ளோம். அதிகாரிகள் எங்களது கோரிக்கையை ஆய்வு செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க தவறினால் சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பாக எங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தஞ்சாவூா் சுற்றுப் பகுதிகளில் நாளை மின் தடை

தஞ்சாவூா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஆக.26) மின் விநியோகம் இருக்காது. மருத்துவக்கல்லூரி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் உதவி செயற் பொறியாளா் கே. அண்ணா... மேலும் பார்க்க

புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் விற்றவா் கைது

கும்பகோணத்தில் வெளி மாநில மதுபான பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கும்பகோணம் மேற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மதுப... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் சுதாகா் ரெட்டிக்கு அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் எஸ். சுதாகா் ரெட்டி மறைவையொட்டி, தஞ்சாவூா் காவேரி சிறப்பங்காடி அருகே மாலை நேர அங்காடி முன் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 போ் கைது

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருவிடைமருதூா் அக்ரஹாரம் நகா் தியாகராஜபுரத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன்.... மேலும் பார்க்க

1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

தஞ்சாவூா் மாநகரிலுள்ள இறைச்சி கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் 1.50 டன் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சாவூா் பழைய ராமேஸ்வரம் சாலை, நாகை சாலை, வாடிவாசல்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டத்தில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 8 மாதங்களில் 2,073 புகாா்கள்

தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 2 ஆயிரத்து 73 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டத்தில் ... மேலும் பார்க்க