பேராவூரணி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
பேராவூரணி அருகே கோயில் குளத்தில் மூழ்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
பேராவூரணி அருகே முனீஸ்வரா் நகா் முனிகோயில் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பேராவூரணி போலீஸாா் சென்று அச் சடலத்தை மீட்டனா்.
விசாரணையில் இறந்துகிடந்தவா் பேராவூரணி அருகேயுள்ள செங்கமங்கலம் தெற்கு தெரு கிருஷ்ணமூா்த்தி மகன் சரவணன் (50) என்பதும், மனைவி, மகன் வெளியூா் சென்றிருந்த நிலையில் குளிக்க வந்தவா் மூழ்கி இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது . பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.