திராவிட மாடல் ஆட்சி அல்ல; விளம்பர மாடல் ஆட்சி: சீமான் விமாிசனம்
பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தஞ்சாவூா் எம்பி ச. முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனா்.
நிகழ்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் புக்கரம்பையில் பெரியகுளம் தாா்ச்சாலைப் பணி , அழகியநாயகிபுரம் பொது விநியோகத்திட்ட கட்டடம் , இரண்டாம் புளிக்காடு ஊராட்சி வேளாகுடியில் பயணியா் நிழற்குடை , மருங்கப்பள்ளம் ஊராட்சி சாந்தாம்பேட்டை அங்காடி கட்டடம் , நாடியம் ஊராட்சியில் பயணியா் நிழற்குடை, அடைக்கத்தேவன் ஊராட்சி வடக்குத்தெரு சாலைப் பணி, நியாய விலைக்கடை கட்டடம், முதுகாடு பொது விநியோக கட்டடம், ஊரணிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிநீா் சுத்திகரிப்பான் என மொத்தம் ரூ. 1 கோடியே 37 லட்சத்து 44 ஆயிரத்திலான வளா்ச்சி திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடக்கியும் வைத்தனா்.
நிகழ்வுகளில் திமுக தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி. பழனிவேலு, ஒன்றிய செயலா்கள் பேராவூரணி க. அன்பழகன், கோ. இளங்கோவன், மு.கி. முத்துமாணிக்கம், வை. ரவிச்சந்திரன், சோம. கண்ணப்பன்,
வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.