செய்திகள் :

பேரிடர்களுக்கு இயற்கையல்ல, நாமே காரணம்: உயர் நீதிமன்றம்

post image

சென்னை: உலகின் பல்வேறு பகுதிகளிலும் நேரிடும் பேரிடர்களுக்கு இயற்கையை இனியும் நாம் குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

உதகை, கொடைக்கானல் உள்பட மலைவாழ்விடங்களில் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து டன் கணக்கில் பிளாஸ்டிக் பொருள்களை சேகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

உலகில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பேரிடர்கள் நேரிடுகின்றன. ஆனால், பேரிடர்களுக்கு இனியும் நாம் இயற்கையை குறைசொல்ல முடியாது, அதற்கு நாம்தான் முதல் காரணம். உரிமைகளை பற்றி பேசும் மக்கள், தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

தோழர் பினராயி விஜயனுக்கு நன்றி! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமாலை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட பகுதிகளில் பல்வேறு இடங்களிலும் வெள்... மேலும் பார்க்க

அமரன் படக் குழுவிடம் ரூ.1.10 கோடி இழப்பீடு கோரி வழக்கு!

அமரன் படத்தின் தன்னுடைய செல்போன் எண் பயன்படுத்தப்பட்டுள்ளதால், ரூ.1.10 கோடி இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு முடியும் வரை அமரன் படத்தை ... மேலும் பார்க்க

மாணவர்களிடம் பரிசோதனை: பள்ளி முதல்வர் பணியிடை நீக்கம்!

சென்னை வனவாணி பள்ளியின் முதல்வர் சதிஷ்குமாரை பணியிடை செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.வனவாணி பள்ளி முதல்வர் சதிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய முதல்வராக பிரின்சி டாம்... மேலும் பார்க்க

நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்

கஞ்சா கும்பலுடன் தொடர்பில் இருந்த புகாரில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகனுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க

சிலருக்கு எப்போதும் விடியல் ஏற்படாது: மு.க. ஸ்டாலின்

அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் இழிவான அரசியல் செய்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார். ஃபென்ஜால் புயல் தமிழகத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், புயல் பாதிப்புகளில் ... மேலும் பார்க்க

ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதி! ஆனால்..

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் கனமழையால் சாலைகள் சேதமடைந்திருந்ததால் தொடர்ந்து மூன்றாவது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், முதல்கட்டமாக இலகு ரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க