கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
பேருந்துக்குக் காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: பெங்களூரில் அதிர்ச்சி!
பெங்களூரில் பேருந்துக்குக் காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரின் கே.ஆர். மார்க்கெட் பகுதியில் ஞாயிறு (ஜன. 19) இரவு 11 மணியளவில் யேலஹங்கா செல்லும் பேருந்துக்கக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது அங்கிருந்த நபரிடம் பேருந்து வருகின்ற நேரம் குறித்து விசாரித்துள்ளார்.
அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் தன்னை நல்லவனைப் போல காட்டிக்கொண்டு பேருந்து நிற்கும் வேறு நிறுத்தத்திற்கு அந்தப் பெண்ணை அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.
பின்னர், அந்தப் பெண்ணை குடோன் வீதிக்கு அழைத்துச் சென்ற அந்த நபர் தனது ஆட்களுடன் அவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான். மேலும், அவரிடமிருந்த உடைமைகளையும் அவர்கள் திருடியுள்ளனர்.
இதையும் படிக்க | பெண் மருத்துவா் கொலை: குற்றவாளியின் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விவரங்களைக் காவல்துறையினர் இன்னும் வெளியிடவில்லை.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, “ஒரு காலத்தில் கலாச்சாரம், மதிப்புகள் மற்றும் பாதுகாப்புக்கு பெயர் பெற்ற கர்நாடகம், இப்போது கொள்ளை மற்றும் குற்றச் சம்பவங்களின் மையமாக மாறியுள்ளது. பேருந்துக்காகக் காத்திருந்த பெண்ணை ஒரு கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்த சம்பவம் மிகவும் கொடூரமான மனிதாபிமானமற்றதாகும். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.