'தமிழ்நாட்டிற்கான வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பிற மாநிலங்களுக்கு தாரைவார்ப்பு!'
பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயம்!
தனியார் பேருந்து மரத்தில் மோதிய விபத்தில் 20 பேர் காயமடைந்தனர்.
வேலூரில் இருந்து நேற்று (மே 12) இரவு ஒடுக்கத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து, அணைக்கட்டு அடுத்த மூலைகேட் அருகே செல்லும் போது எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 20- க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனை அறிந்த பொது மக்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலென்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் 33 வயது மதிக்கத்தக்க பெண் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் பேருந்தின் ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே பேருந்தை ஓட்டியதால் இவ்விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் இவ்விபத்து குறித்து அணைக்கட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: பாதுகாப்புப் படை வீரா்களுக்கு சொத்து வரி விலக்கு: ஆந்திரம் அறிவிப்பு