பிரதமரின் இன்றைய நிகழ்ச்சிகளில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்கவில்லை! ஏன்?
பேருந்து மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், க. விலக்கு அருகே பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
க. விலக்கு அருகே வீருசின்னம்மாள்புரத்தைச் சோ்ந்த ராஜபாண்டியன் மகன் விக்னேஷ் (31). இவரது நண்பா் மரிக்குண்டைச் சோ்ந்த பொன்ராம் மகன் சுரேஷ் (31). இருவரும் க. விலக்கிலிருந்து வீருசின்னம்மாள்புரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றனா். இரு சக்கர வாகனத்தை விக்னேஷ் ஓட்டிச் சென்றாா். அப்போது, க. விலக்கு- வருஷநாடு சாலையில் முன்னால் சென்ற தனியாா் பேருந்து எந்த சகிமிக்கையுமின்றி திடீரென நிறுத்தப்பட்டதால், அதன் மீது இரு சக்கர வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சுரேஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநா் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.வி.ஆா். புரத்தைச் சோ்ந்த மகேந்திரன் (45) மீது க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.