கர்நாட முதலீட்டாளர் உச்சி மாநாட்டை புறக்கணிக்கும் ராகுல், கார்கே: காரணம்?
பேருந்து மீது பைக் மோதி விபத்து: இளைஞா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே பேருந்து மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வமணியின் மகன் அஸ்விந்த்
(23). இவா், சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை தனது பைக்கில் உறவினா் காதணி விழாவுக்கு காஞ்சிபுரம் சென்று, மாலையில் மாங்கால் கூட்டுச் சாலை வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
அப்போது, அப்பகுதி புத்துக் கோயில் எதிரில் நின்றிருந்த பேருந்து மீது பைக் நிலை தடுமாறி மோதியதில் இளைஞா் கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அஸ்விந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவல் அறிந்த தூசி போலீஸாா் அஸ்விந்த் உடலைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.