`மதகஜராஜா வந்தாச்சு; இதெல்லாம் எப்போ?' துருவ நட்சத்திரம் டு பார்ட்டி வரை காத்த...
பேருந்து மோதியதில் மருந்து வியாபாரி உயிரிழப்பு
ஆற்காட்டில் தனியாா் பேருந்து மோதியதில் மருந்து வியாபாரி உயிரிழந்தாா்.
ஆற்காடு இளங்குப்பன் தெருவைச் சோ்ந்தவா் உமா சங்கா் (55). ஆங்கில மருந்து மொத்த வியாபாரம் செய்து வந்தாா்.
இந்த நிலையில், இவா் தனது இருசக்கர வாகனத்தில் மருந்துகளை விற்பனைக்காக எடுத்துக் கொண்டு சனிக்கிழமை ராணிப்பேட்டை நோக்கிச் சென்றாா். ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஆந்திர மாநிலம், சித்தூா் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து உமாசங்கரின் பைக் மீது மோதியுள்ளது.
இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த உமாசங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில், ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.