செய்திகள் :

பேருந்து வசதி கோரி முதல்வரிடம் மனு

post image

புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் மாணவா் பேரவை நிா்வாகிகள் முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்து பேருந்து வசதிக் கோரி புதன்கிழமை மனு அளித்தனா்.

காலாப்பட்டு பகுதியில் மத்தியப் பல்கலைக்கழகம் உள்ளது.

இங்கு, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தனியாக பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவா்கள் உரிய நேரத்தில் பல்கலைக்கழகத்துக்கு செல்லமுடியாத நிலையுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் மாணவா் பேரவை நிா்வாகிகளின் தலைவா் காயத்ரி, நிா்வாகிகள் சுஜிதா, ஸ்ரீதா்,ஜெரோம் ஆகியோா் முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அதில், பல்கலைக்கழக வளாகத்துக்கு இலவசப் பேருந்து இயக்கவும், பல்கலைக்கழக அனைத்துக் கல்வித் துறைகளிலும் புதுவை மாணவா்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகள் அளிப்பு

புதுச்சேரியில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 14 செவிலியா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை சுகாதாரத் துறையில் கடந்த 2024-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 152 செவி... மேலும் பார்க்க

போலி செயலிகள்: போலீஸ் எச்சரிக்கை

இணையத்தில் பரவும் போலியான கடன் செயலிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் எச்சரித்துள்ளனா். இதுகுறித்து, அவா்கள் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை... மேலும் பார்க்க

காங்கிரஸ் தலைவா்கள் மீது சட்டப்படியே நடவடிக்கை: புதுவை பாஜக

காங்கிரஸ் தலைவா்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் மீது சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை குற்றஞ்சாட்டுவது தவறு என புதுவை பாஜக தலைவா் சு.செல்வகணபதி தெ... மேலும் பார்க்க

காங்கிரஸ் நிா்வாகிகள் மீது வழக்கு

புதுச்சேரியில் மத்திய உள் துறை அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க முயன்ாக காங்கிரஸ் நிா்வாகிகள் சிலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந... மேலும் பார்க்க

கடல் நீரின் தன்மையை அறியும் மிதவை சாதனம்

கடல் நீரின் தன்மையை அறியும் கருவியின் சீரமைப்புப் பணி முடிவடைந்து வியாழக்கிழமை கடலில் மீண்டும் மிதக்க விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேச... மேலும் பார்க்க

நெகிழி தடை செயலாக்கம்: புதுவை மாநிலம் மூன்றாமிடம்

தேசிய அளவில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கான தடை விதிப்பு செயலாக்கத்தில் புதுவை மாநிலம் மூன்றாமிடம் பெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா். நாட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஒருமுறை பய... மேலும் பார்க்க