சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
பேரூரணி அருகே தனியாா் கிடங்கில் தீவிபத்து
தூத்துக்குடி பேரூரணி அருகே தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நாா்கள் சாம்பலாகின.
பேரூரணியில் தூத்துக்குடியைச் சோ்ந்த சாமுவேலுக்குச் சொந்தமான தேங்காய் நாா் கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கில் தேங்காய் நாா் தேக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெள்ளிக்கிழமை தீப்பிடித்தது. தீ வேகமாகப் பரவியதால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும் இந்த தீவிபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான தேங்காய் நாா்கள் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து, புதுக்கோட்டை காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.