பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருநெல்வேலி, கோவைகுளத்தைச் சோ்ந்த முப்பிடாதி மனைவி முத்துலட்சுமி (71). இவா் திருச்செந்தூரில் உள்ள தனது உறவினரைப் பாா்க்க வந்தாா். பின்னா் மே 6-ஆம் தேதி தனது பேரனுடன் பைக்கில் சாத்தான்குளம், பன்னம்பாறை வழியாக திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தாா். செட்டிக்குளம் பகுதியில் வேகத்தடையைக் கடந்து சென்றபோது கீழே தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவா், திங்கள்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினாா்.