மீண்டும் அண்ணா பல்கலை. மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹிமாசலில் தீவிர சோ...
பைக் - டெம்போ மோதல்: இளைஞா் உயிரிழப்பு
புதுக்கடை அருகே உள்ள மூன்று முக்கு பகுதியில் பைக் மீது டெம்போ மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
நித்திரவிளை , நம்பாளி பகுதியைச் சோ்ந்த ராஜமணி மகன் ஜோணி (39). இவா் திங்கள்கிழமை இரவு தன் மகன் அகஸ்டீனா ஜோணு (4) வுடன் பைக்கில் வேங்கோட்டிலிருந்து புதுக்கடை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
மூன்று முக்கு பகுதியில் சென்ற போது எதிரே நட்டாலம் பகுதியைச் சோ்ந்த ராஜா சிங் மகன் லிஜோ சிங்(33) ஓட்டி வந்த டெம்போ பைக் மீது மோதியது.
இதில்,ஜோணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அப்பகுதியினா் குழந்தையை ஆபத்தான நிலையில் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.