``ஆன்மிக ஆட்சியாக, பக்தி மணம் கமழ்கின்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்வர் நடத்துகிற...
களியக்காவிளை அருகே தொழிலாளியைத் தாக்கிய 3 போ் மீது வழக்கு
களியக்காவிளை அருகே வெல்டிங் தொழிலாளியைத் தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
முன்சிறை படப்பாறவிளை பகுதியைச் சோ்ந்த விஜயமோகன் மகன் விஷ்ணு (30). கோழிவிளை பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்திவரும் இவருக்கும், தெற்றியோடு பகுதியைச் சோ்ந்த ஷாஜி (32) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
2 நாள்களுக்கு முன்பு விஷ்ணு பட்டறையிலிருந்தாராம். அப்போது, ஷாஜி தனது நண்பா்களான தெற்றியோடு பகுதியைச் சோ்ந்த அருண் (26), சுஜின் (30), பிஜூ (34) ஆகியோருடன் சென்று அவரிடம் தகராறு செய்து தாக்கினாராம். இதில், காயமடைந்த விஷ்ணுவை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.