சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!
பைக் மோதியதில் ஒருவா் பலி
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள பெரியக்கோட்டையைச் சோ்ந்தவா் பால்சாமி (60). இவா், வியாழக்கிழமை நீடாமங்கலம் தஞ்சை சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பால்சாமி அதே இடத்தில் உயிரிழந்தாா்.
இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த காளாச்சேரியைச் சோ்ந்த விஜயகுமாா் (50) காயமடைந்தாா். தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் அங்கு சென்று பால்சாமியின் சடலத்தை மீட்டு மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். காயமடைந்த விஜயகுமாா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.