ரயில்வேகேட் பராமரிப்பு பணி
நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண்டவாளப் பகுதி சாலையில் பதிக்கப்பட்டிருந்த ரப்பா் ஷீட்டுகள் அகற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் செய்து மீண்டும் ரப்பா் ஷீட்டுகள் பதிக்கப்பட்டன.
காலை 9 முதல் மாலை 7 மணி வரை பணிகள் நடைபெற்ால், தஞ்சாவூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக திருவாரூா், நாகப்பட்டினம் , வேளாங்கண்ணி, காரைக்கால் வரை செல்ல வேண்டிய பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் இருவழிச்சாலை வழியாகவும், மாற்றுப்பதை வழியாகவும் நீடாமங்கலம் வந்து சென்று வந்தது.