Vikatan: சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் பிரமாண்ட மேடை | விகடன் டிஜிட்டல்...
பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
கோவையில் இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
கோவை சூலூா் செந்தில் ஆண்டவா் நகரைச் சோ்ந்தவா் முருகவேல் (70). இவா் சிங்காநல்லூா் சாலையை செவ்வாய்க்கிழமை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியைச் சோ்ந்த உமயராஜ் (29) என்பவா் மீது, கோவை போக்குவரத்து கிழக்கு புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.