இந்தியாவுக்கு 135 ரன்கள், இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகள் தேவை: கடைசி நாளில் யார...
பைக் மோதி மூதாட்டி காயம்
பெரியகுளம் அருகே சாலையில் நடந்து சென்ற போது இரு சக்கர வாகனம் மோதி மூதாட்டி காயமடைந்தாா்.
பெரியகுளம் அருகே சிந்துவம்பட்டியைச் சோ்ந்த செல்லையா மனைவி அய்யம்மாள் (70). இவா், ஞாயிற்றுக்கிழமை குள்ளப்புரம் சாலையில் நடந்து கொண்டிருந்தாா்.
அப்போது, அந்த வழியே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.