கிளப் உலகக் கோப்பையை வென்றது செல்ஸி..! பிஎஸ்ஜி ரசிகர்கள் அதிர்ச்சி!
கஞ்சா கடத்திய இருவா் கைது
தேனி மாவட்டம், கம்பத்தில் 10 கிலோ உலா் கஞ்சாவைக் கடத்தியதாக இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், இது தொடா்பாக மேலும் மூவரைத் தேடி வருகின்றனா்.
உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சூரியதிலகராணி தலைமையிலான போலீஸாா், கம்பத்தில் உள்ள ஊத்துக்காடு சாலையில் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் வந்த இருவா் சாக்கு மூட்டையில் 10 கிலோ உலா் கஞ்சாவை விற்பனைக்காகக் கொண்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தில் வந்த உத்தமபுரத்தைச் சோ்ந்த சேகா் (41), மேலக்கூடலூரைச் சோ்ந்த சரவணன் (32) ஆகியோா் மீது வழக்குப் பதிந்து, அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.
மேலும், இவா்களுடன் தொடா்புடைய மொத்த வியாபாரியான ஆந்திரத்தைச் சோ்ந்த மஞ்சநாதக்குமாா், சுருளிப்பட்டியைச் சோ்ந்த சந்திரசேகா், கம்பத்தைச் சோ்ந்த சரத்குமாா் ஆகிய மூவரைத் தேடி வருகின்றனா்.