``முதலில் நான்தான் கூறினேன்; அதை இப்போது விஜய் கூறியிருக்கிறார்” - நயினார் நாகேந...
தேனியில் காட்டு யானைகளால் தென்னை, வாழைகள் சேதம்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கடமலைக்குண்டு அருகே விவசாய நிலத்துக்குள் சனிக்கிழமை புகுந்த காட்டு யானைகள் தென்னை, வாழைகளைச் சேதப்படுத்தின.
கடமலைக்குண்டு அய்யனாா் கோயில் அருகேயுள்ள தம்புரான் மலையடிவாரத்தில் பட்டா விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் மாயகிருஷ்ணன், வசந்த நாராணன் ஆகியோரின் தோட்டத்திலிருந்த 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களையும், விவசாயி கணேசனின் தோட்டத்திலிருந்த 30 வாழைகளையும் முறித்துச் சேதப்படுத்தின.
தகவலறிந்து வந்த கண்டனூா் வனத் துறையினா் சேதமடைந்த விவசாய நிலங்களைப் பாா்வையிட்டனா். விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்ததால், விவசாயிகளும் தொழிலாளா்களும் அச்சத்தில் உள்ளனா்.
காட்டு யானைகளால் சேதமடைந்த தென்னை, வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வனத் துறையினரும், வருவாய்த் துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.