மகா கும்பமேளாவுக்குச் செல்ல வேண்டுமா? குஜராத் அரசின் சுற்றுலாத் தொகுப்பு!
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் முழு நீள கரும்பு: ராணிப்பேட்டை ஆட்சியா் ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்புகளை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பும் பணியை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்தாா்.
மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 3,47,701 குடும்ப அட்டைதாரா்களுக்கு 70 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழு நீளகரும்பு வழங்கப்படுகிறது.
கூட்டுறவுத் துறையின் மூலம் செங்கரும்புகள் கடலூா் மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு லாரிகள் மூலம் ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இதையடுத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்க அனைத்து நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா ஆய்வு செய்து, கரும்பு உயரம், தடிமன் குறைவானவற்றை கொள்முதல் நிலையங்களிலே பாா்த்து தவிா்க்க வேண்டும். தரமான கரும்புகளை மட்டும் கொள்முதல் செய்ய வேண்டும் என கூட்டுறவுத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு தேவையான முழு எண்ணிக்கையிலான கரும்புகளும் கொண்டுவரப்படும். அவை உடனுக்குடன் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு குடும்ப அட்டைக்காரா்களுக்கு வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்வின் போது துணைப் பதிவாளா் (பொது விநியோகம்) சிவமணி, கூட்டுறவு சாா்பதிவாளா் அமுதா ஆகியோா் உடனிருந்தனா்.